அமெரிக்க அதிசயம&


Jump to Page:
< Previous  [ 1 ]    Next >




Vandematram   
Member since: Nov 08
Posts: 1448
Location: Sunny - Leone

Post ID: #PID Posted on: 22-05-10 10:28:04

Junior Vikatan

Issue Date: 26-05-10

அமெரிக்க அதிசயம்

இந்தியர்களாகும் பாகிஸ்தானியர்கள்..!


நம்பவே மாட்டீர்கள்... அமெரிக்க நகரங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர் களின் போக்கில் இப்போது திடீர் மாற்றம். பெயர், பேச்சு, நடை உடை பாவனைகள் உட்பட இந்தியர்கள் ஸ்டைலில் திடுதிப்பென்று மாறி வருகின்றனர். இந்தியர்களை இளக்காரமாகப் பார்த்து வந்தபாகிஸ்தானியர்களிடம் ஏன் இந்தத் திடீர் மாற்றம்?



பாகிஸ்தானியர்கள் என்று தெரிந்தாலே சமீபகாலமாக அமெரிக்காவில் 'தர்ம அடி' கிடைப்பதுதான் காரணம். டைம்ஸ் சதுக்கம் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதான பாகிஸ்தானிய அமெரிக்கரான ஃபைசல் ஷாசாத் மற்றும் அவரது ஊர் கூட்டாளிகளை நியூயார்க் போலீஸ் கைது செய்த பிறகு, அமெரிக்கர்களுக்கு அவர்கள் மீது கடுமையான வெறுப்பு!

பாகிஸ்தானியர்களின் கடைகளைப் புறக்கணிப்பது, ரயில் - பேருந்துகளில்


அவர்களுடன் அமராமல் அவமதிப்பது போன்றவை சகஜமாகிவிட்டன. பல இடங்களில் பாகிஸ்தானியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்களும் நடக்க... பல ஆயிரம் பாகிஸ்தானிய குடும்பங்கள் பயத்துடன் உள்ளன. செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்புகளுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் மீது வெறுப்பைக் காட்டும் அமெரிக்கர்கள் - ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், லிபியா ஆகிய நாட்டு பிரஜைகளைத்தான் கேவலமாக நடத்தி வந்தனர். இப்போது பாகிஸ்தானியர்களும் அந்தப் பட்டியலில்!

இதுபற்றி நியூயார்க் பத்திரிகையாளர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, ''சுமார் மூன்று லட்சம் பாகிஸ்தான் குடும்பங்கள் இங்கு நிரந்தரமாக வசிக்கின்றன. இப்போதுதான் இந்த வெறுப்பு தீவிரமாகி வருகிறது. காரணம், செப்டம்பர் 11 சம்பவத்தின் சதிகாரர்களில் ஒருவனான காலித் ஷேக் முகமது, 1993 உலக வர்த்தக மையம் மீது குண்டு போட்ட ராம் இ யூசுப், மும்பைக் குண்டு வெடிப்புச் சதிகாரன் ஹேட்லி எல்லோரும் பாகிஸ்தானியர்களே.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாகிஸ்தான் மாணவர்கள் மீது தாக்குதல்கள் அரங்கேறுகின்றன. பாகிஸ்தானியர்கள், ரயிலிலோ, விமானத்திலோ பறக்கும் முன்பு, கடுமையாகச் சோதிக்கப்படுகின்றனர். இந்திய இஸ்லாமியர்களுக்கும் இதே கதிதான்.

நீண்ட தாடி, மழித்த மீசை, குல்லா மற்றும் புர்க்கா என்று திரிந்த பாகிஸ்தானியர்கள், இப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக 'இந்தியர்களாக'வே மாறி வருகிறார்கள். 'பாகிஸ்தானி ரெஸ்ட்டாரன்ட்' என்ற பெயர்கள், இந்தியன் அல்லது ஆசியன் ரெஸ்ட்டாரன்ட் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. பல ஆயிரம் குடும்பங்கள் பாகிஸ்தானுக்கே குடிபெயர்வதும் தொடங்கிவிட்டன.

டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த மாபெரும் பேரணியில் 'பாகிஸ்தான் நாய்களே, திரும்பிப் போ!' என்ற கோஷமே உச்சத்தில் இருந்திருக்கிறது...

அமெரிக்காவில், சவூதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளின் உதவியுடன் ஏராளமான மசூதிகள் கட்டப்படுகின்றன. இங்கெல்லாம் தீவிரவாதச் செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டப்படுமோ என பயந்து, சாட்டிலைட் மூலம் அவை கண்காணிக்கப்படுவதால், பலர் தொழுகைக்குப் போவதையே நிறுத்திவிட்டார்கள். உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட இடத்தின் மிக அருகே, பெரிய மசூதி கட்ட அனுமதி கேட்டுள்ளதும் நியூயார்க்கைப் பரபரப்பாக்கி உள்ளது. 'அனுமதிக்கக் கூடாது' என்று தினமும் போராட்டங்கள் நடக்கின்றன.'' என்று நடப்பைத் தெரிவித்தனர்.

''பாகிஸ்தானியர்கள் ஓட்டும் டாக்ஸிகளில் பயணிகள் ஏறுவதில்லை என்பதால், அவர்கள் பிழைப்பில் மண். பாகிஸ்தானியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோனி தீவு, காக்ஸன் ஹைட்ஸ், ப்ரூக்கிளின் பகுதிகளில் திடீர் திடீர் எனக் காவல் துறையினர் 'ரெய்டு' செய்து, விசா இல்லாத பாகிஸ்தானியர்களை நாடு கடத்துகின்றனர். 2001 கோரச் சம்பவங்களுக்குப்பிறகு அமெரிக்கா பொருளாதாரத்தில் எழ முடியவில்லை. வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சீர்குலைவோடு, கடன் தொல்லையிலும் நாடு தவிக்கிறது. இதற்கெல்லாம் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள்தான் காரணம் என்பது அமெரிக்கர்களின் கோபம்.

பாகிஸ்தானியர்கள் என்றாலே, அல்-கொய்தா, தாலிபன் ஆதரவாளர்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணம் கண்காணிக்கப்படுகிறது.

'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எனும் பிரபல அமெரிக்கப் பத்திரிகை நிருபர் டேனியல் பேர்ஸ், பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அமெரிக்கப் பத்திரிகைகளும் பாகிஸ்தானியர்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டன. பெரும்பாலான பத்திரிகைகள் யூதர்கள் கையில் இருப்பதாலும், பாகிஸ்தானியர்களுக்குத் திண்டாட்டம்.

வெளியில் இருந்து தீவிரவாதிகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவந்து நாச வேலை செய்ய முடியாது என்று இப்போதெல்லாம் மதப்பற்று அதிகம் உள்ள இஸ்ஸாமிய அமெரிக்கக் குடிமக்களை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்று பயிற்சி முகாம்களில் பயங்கரவாதம் கற்றுத் தருகிறது பாகிஸ்தான். அமெரிக்கா திரும்பி வந்து இங்கேயே முகாம்களை அமைக்கும் அளவுக்கு அவர்கள் துணிந்துவிட்டார்கள். கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் ஏழை இஸ்லாமியர்களைப் பணம் கொடுத்து வாங்கி, அமெரிக்காவில் மூளைச்சலவை செய்கிறார்கள். பல பகுதிகளில் தீவிரவாத வகுப்புகள் நடப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வும், எஃப்.பி.ஐ-ம் சந்தேகிக்கின்றன. பல தீவிரவாத அமைப்புகள் இந்தப் பகுதிகளில் மதரஸாக்களை அமைத்து, குழந்தைகளுக்கும் மூளைச்சலவை நடத்துகிறது எனக் கருதும் எஃப்.பி.ஐ., உருது, பாரசீக, அரேபிய மொழி பேசும் உளவு அதிகாரிகளை அமர்த்தி அவற்றைக் கண்காணிக்கிறது.

பாதி இஸ்லாமியரான அமெரிக்க அதிபர் பாரக் ஹยงசேன் ஒபாமா, முந்தைய அதிபர் புஷ்போன்று இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம் கண்டிப்புடன் இல்லை என்று குடியரசுக் கட்சியினர் பிரசாரம் செய்வது வழக்கம். இருந்தாலும், டைம்ஸ் சதுக்கம் குண்டுவெடிப்புக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டன், பாகிஸ்தானியத் தலைவர்களை அழைத்து, 'இதுவே கடைசி எச்சரிக்கை... தீவிரவாதிகளை அடக்கிவைக்காவிட்டால், பாகிஸ்தானுக்கு மிகவும் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிடும்' என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.'' என்று பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் பலர் பகிர்ந்துகொள்கின்றனர்.

அமெரிக்காவில் தாக்குப்பிடித்து வாழ, பாகிஸ்தானிகள் இந்திய ஸ்டைலில் மாறி வருவது குறித்து, ''இது இன்னும் அபாயகரமானது. இந்தியர்கள்போன்று காட்டிக்கொண்டு இவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால், அது நம்மைப் பெரிதும் பாதிக்கும். இதுபற்றி அமெரிக்க அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம்!'' என்றார், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர்.

ஆப்கானிஸ்தானில் இருந்தபடியே ஆள் இல்லாத போர் விமானங்கள் மூலம் அமெரிக்கா, பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத முகாம்களைக் குண்டு வீசித் தாக்கி வருகிறது. பல நூறு தீவிரவாதிகளோடு, பொதுமக்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பாகிஸ்தானிய எதிர்ப்பு, எதில் போய் முடியுமோ?


--------------------------------------------------------------------------------
Name Comments


murugappan
சும்மா சொல்லக்கூடாது, பால் காந்தி அவர்களே, பின்னிட்டீங்க போங்க. வி.முருகப்பன். சிங்கபூர்.


Report abuse | 2 hours ago

John
Pal Gandhi...Sorry to say this...Don''t talk like this....The person involved on this was already a US Citizen....So please stop your ....Vikatan please publish tjis


Report abuse | 3 hours ago

ALEXIS
இதென்ன பெரிசு இங்கு ஐரோப்பிய நாடுகளில் இந்தியர்கள் பலர் இலங்கை தமிள் அகதிகளாக மாறிய கதை 10,15 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கின்றதே. நிரந்தர வதிவிடத்துக்காக.


Report abuse | 3 hours ago

Sindhu
They should believe/trust that their God is more stronger than them. He is not depending on them for spreading his religion. Innocent people thinking their God is depending on them for spreading religion. hahahahahah is he God or ? please think of it. Overflow your humanity, divinity will come, that is all whoever it is


Report abuse | 3 hours ago

Sindhu
Pakistanis are always proud of saying Pakis in abroad. If something goes wrong or if they do mistakes or misbehave, nepal and Bangladesh people say immediately I am INDIAN, trying to spoil Indian names outside. Now this educated Pakis are also acting like Indians. Pathetic. hahahahaha, See we are helping them.....................


Report abuse | 3 hours ago

Kirubakaran
விரைவில் இந்திய எதிர்ப்பாக மாறும்!


Report abuse | 5 hours ago

Lakshman
பொட்டு வைத்து கொள்ளவும்


Report abuse | 7 hours ago

sathya
Whart is happening here in India? Bangladeshis are slowly settling in all states and getting ration cards, voter ID etc. Our government employees and brokers are helping them just for some money. Our \\\"investigative journals\\\" are not bothering about real social issues .Nithyananda''s story will help improve circulation ...people ...as usual irresponsible.....We will pay a heavy price then and there.


Report abuse | 7 hours ago

Pal Gandhi
50 வருடம் முன் பிரிட்டிஷ்காரன் உதவியால் இந்தியர்கள் பாகிஸ்தானி ஆனார்கள். இன்று அமெரிகன் உதவியால் பாகிஸ்தானி, இந்தியர்கள் ஆகிறார்கள். காலம் தான் பதில் சொல்லிடுச்சு.


Report abuse | 9 hours ago

Pal Gandhi
ஒபாமா-வுக்கு மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணை கிணறு தோண்டனும். Republic பார்டிக்கு இங்கு எண்ணைகிணறு தோண்டகூடாது, எனவே இங்குள்ள எண்ணைகிணற்றில் உடைப்பை உண்டாக்கி, ஓபாமாவை அழுத்தினார்கள். இந்த அழுத்தத்திற்கு பதில் அழுத்தம் கொடுக்காவும், செய்திதாள், டிவியை திசைதிறுப்பவும், இந்த டைம்ஸ் ஸ்குவார் நாடகம். இந்த நாடகத்தில் நடித்த பாகிஸ்தானி குடும்பத்திற்கு உடனடி குடியுரிமை/கிரீன் கார்ட் கிடைத்துவிடும்.


-----------------------------------------------------------------
Sunny Leone a true Canadian DESI now back in India !.




Jump to Page: < Previous  [ 1 ]    Next >

Discussions similar to: அமெரிக்க அதிசயம&

Topic Forum Views Replies
Jobs section should have date and time
Feedback and Comments 1698 1
e-client status
Ask Immigration Expert 1647 4
Suggesstion for Citizenship app. status page
Citizenship 1742 5
Transit visa - France
Visiting, Traveling and Picnicing 2873 4
HOW SOON CAN I RETURN AND COME BACK TO CANADA AFTER LANDING?
Moving Soon 3612 6
Junior .Net Position wanted
Wanted 1626 1
If U've a problem U Go2 Balaji!; If Balaji has a problem, where does he Go? ( 1 2 3 )
Our Native Country! 3642 15
Renewing Indian Passport ( 1 2 3 )
General 7156 16
Travel document
Ask Immigration Expert 1565 2
Visitor visa expiry
Ask Immigration Expert 1654 4
Ottawa oath timeline
Citizenship 1691 2
AnyOne applied for PR renewal ( 1 2 )
Citizenship 2092 8
from Junior
Where to settle 1197 0
Best Date landing Day
Just Landed 1195 1
Doctor Registration and OHIP And others ( 1 2 )
Just Landed 2397 7
B2 USA Visitor Visa Emergency Date Ottawa/Toronto?
Ask Immigration Expert 1809 1
Hindu god pictures for download from a tamil website
General 1220 0
Poll: Do you think Iran vs Israel fight will start very soon....
General 2454 5
Tax filing requirements for immigrant wife
Accounting and Taxation 1553 3
Mobile Version of Canadian Desi ( 1 2 3 )
Feedback and Comments 4888 14
Vistor visa issue
Family Class 1112 1
Slow Performance, Any Suggestions ( 1 2 )
Feedback and Comments 2998 7
How many non desi friends do you have ? ( 1 2 3 ... Last )
Life 12803 73
A question regarding OCI part B form
Citizenship 3000 2
 


Share:
















Advertise Contact Us Privacy Policy and Terms of Usage FAQ
Canadian Desi
© 2001 Marg eSolutions


Site designed, developed and maintained by Marg eSolutions Inc.